மடிச்சல் பகுதியை சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளர் அஜித் (34) என்பவரை, அவரது மனைவி ஸ்ரீதன்யாவுக்கு மத்திக்கோடு பகுதியை சேர்ந்த தீபக் ராஜ் (30) என்பவருடன் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தை கண்டித்ததால், தீபக் ராஜ் தனது நண்பர்
விஜய் உடன் சேர்ந்து அஜித்தை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். மேலும், ஸ்ரீதன்யா நடத்தி வரும் கிளினிக்கையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் ராஜ் மற்றும் விஜயை கைது செய்துள்ளனர்.