அருமனை பகுதியைச் சேர்ந்த 39 வயது சிஆர்பிஎப் வீரர் சுனில் ராஜ், குடும்பப் பிரச்சனை காரணமாக வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. வெள்ளிச்சந்தை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுனில் ராஜ் சட்டீஸ்கர் மாநிலத்திலும், அவரது மனைவி சிவராணி கோவையிலும் சிஆர்பிஎப்-ல் பணிபுரிந்து வருகின்றனர்.