பேச்சிப்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக யானைக் கூட்டம் குட்டிகளுடன் சுற்றித் திரிந்து, அசோகன் என்பவரின் வாழை, தென்னந்தோட்டங்களையும், பிரபாகரன் என்பவரின் வீட்டையும் சேதப்படுத்தியுள்ளது. இதில் அந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். யானைகளின் அட்டகாசத்தால் மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் குடியிருப்புகளில் பொதுமக்கள் இரவில் தூக்கமின்றி தீப்பந்தம் ஏந்தி காவல் காத்து வருகின்றனர். வனத்துறையினர் யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.