குழித்துறை பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (36) என்பவர், பழவார் பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு தோட்டத்தை பார்வையிடச் சென்றபோது, அவரது பைக் திருடப்பட்டது. பைக்கில் சுமார் 3 பவுன் தங்க நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மகேஸ்வரி, பைக்கிற்கு ஃபைனான்ஸ் கட்டி முடிக்காத நிலையில், ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்களே பைக்கை திருடிச் சென்றதாக களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி ராஜ் (50) மற்றும் பினு (43) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.