பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி களியக்காவிளை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகா சிவராத்திரி விழாவுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சிவராத்திரிக்கு அரசு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற காங்கிரஸ் கட்சியினர் 90 சதவீதம் பேர் விரும்புவதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.