மார்த்தாண்டம்: பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்

4பார்த்தது
மார்த்தாண்டம்: பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்
முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்த தங்க லீலா (60) இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். இன்று 25-ம் தேதி நட்டாலம் பகுதியில் உள்ள மதுரகுளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மார்த்தாண்டம் போலீசார் மற்றும் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். சுமார் 15 அடி ஆழமுள்ள பாசி படிந்த குளத்தில் அவர் எப்படி விழுந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தற்கொலையா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி