நித்திரவிளை: ஆட்டோ டிரைவர் தற்கொலை

83பார்த்தது
நித்திரவிளை: ஆட்டோ டிரைவர் தற்கொலை
நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு தபால் நிலைய சந்திப்பு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தவர் சதீஷ்குமார் (42). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 9-ம் தேதி இரவு வழக்கம் போல் படுக்கச் சென்றார். மறுநாள் காலையில் வாயில் நுரையை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். 

இதைப் பார்த்த மனைவி லில்லிபாய் (34) அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று இருந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.