புதுக்கடை: வீட்டில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை

62பார்த்தது
புதுக்கடை: வீட்டில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபிதாஸ் (39). தொழிலாளியான இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரபா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரபா கணவரை விட்டுப் பிரிந்து அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

இதனால் மனவருத்தமடைந்த கோபிதாஸ் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் உடனடியாக புதுக்கடை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி