தக்கலை: நடந்து சென்ற முதியவர் மீது வாகனம் மோதி பலி

56பார்த்தது
தக்கலை: நடந்து சென்ற முதியவர் மீது வாகனம் மோதி பலி
தக்கலை அருகே விலவூர் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (90). இவர் நேற்று பறைக்கோடு பகுதியில் சாலையோரம் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென குமாரசாமி மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்ட குமாரசாமி படுகாயம் அடைந்தார். 

அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டுச் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை பார்த்தபோது குமாரசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவுசெய்து குமாரசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி