தேங்காப்பட்டணம்: வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

1பார்த்தது
தேங்காப்பட்டணம்: வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்
தேங்காய்பட்டணம் அருகே அம்சி பகுதியைச் சேர்ந்த 43 வயதான கெப்சின், குடும்பப் பிரச்சனை காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் அவரது வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக உறவினர்களால் கண்டறியப்பட்டார். படுக்கை அறையில் அழுகிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டுள்ளது. புதுக்கடை போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி