குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா, 16-ம் தேதி திற்பரப்பு அருவி மேம்பாட்டு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். ரூ. 4.30 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகளான சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுச்சீட்டு வழங்குமிடம், பெண்கள் உடைமாற்றும் அறை, நடைபாதை, கழிப்பறைகள், பூங்கா மேம்பாடு போன்றவற்றை பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.