உண்ணாமலைக்கடை: குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

1பார்த்தது
உண்ணாமலைக்கடை: குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
கிள்ளியூர் அருகே உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த தங்கையா (49) என்ற தொழிலாளி, நேற்று வீட்டின் அருகில் உள்ள ஆலுமூட்டு குளத்தில் குளிக்க சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது, அவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து தங்கையாவின் மகன் மதன் (19) மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் உடலை மீட்டு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி