
இரணியல்: போதையில் வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
தலகுளத்தை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் வெளிநாடு வேலைக்கு செல்ல இருந்த நிலையில், நேற்று மாலை மதுபோதையில் குளக்கரையில் இருந்தபோது குளத்தில் குதித்துள்ளார். தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








































