வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் (62) என்ற தனியார் நிறுவன டிரைவர், கடந்த மாதம் 26 ஆம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பும்போது, பின்னால் வந்த மகேஷ் (32) ஓட்டி வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி சுபஜா அளித்த புகாரின் பேரில், வெள்ளிச்சந்தை போலீசார் மரண வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.