இரணியல் அருகே நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் காரணமாக பேயன்குழி இரட்டைக்கரை கால்வாய் வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இன்று 4-ம் தேதி, அந்த வழியாகச் சென்ற கார் நிலைத்தடுமாறி கால்வாயில் கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது.