குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆன்டனி (50) நேற்று முன்தினம் இரவு இரணியல் ரயில் நிலையம் வந்தபோது, அவரிடமிருந்த ரூ. 2 லட்சத்து 82 ஆயிரத்து 500 அடங்கிய பணம் இருந்த பேக்கை ரயிலில் தவறவிட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசாரும் பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து நாங்குநேரி ரயில் நிலையத்தில் அந்தப் பணப் பையை மீட்டெடுத்து, ஆன்டனியிடம் நேற்று ஒப்படைத்தனர். கொல்லத்தில் தங்கியிருக்கும் சக தொழிலாளர்களுக்கு கொடுக்க இந்த பணம் இருந்ததாக ஆன்டனி தெரிவித்தார்.