இரணியல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் பக்தர்கள் 41 நாள் விரதம் இருந்து, இன்று 21-ம் தேதி பல்வேறு வகையான காவடிகள் (புஷ்ப காவடி, வேல் காவடி, எண்ணெய் காவடி, பறக்கும் காவடி, தேர் காவடி) எடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதனையொட்டி, குளச்சல் போக்குவரத்து போலீசார் சார்பில் திங்கள்நகர் முதல் இரணியல் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.