இரணியல்: பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

1பார்த்தது
குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டல் மல்லிகா (43) என்பவர் நேற்று இரவு உறவினர் வீடு சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, அவரது வீட்டின் சுவர், ஜன்னல் கதவு மற்றும் மின் மீட்டர் ஆகியவை எரிந்த நிலையில் கண்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதே வீட்டில் கடந்த மாதம் 10 ஆம் தேதி கதவை உடைத்து 3 பவுன் தங்க செயின் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு நடந்திருந்தது. ஆனால், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்தி