இரணியல் அருகே பாறைக்காவிளை பகுதியைச் சேர்ந்த ரெதீஸ் (33) என்ற டெம்போ டிரைவர், நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த கேரள கார் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ரெதீஸின் மனைவி ஷாலினி அளித்த புகாரின் பேரில், இரணியல் போலீசார் கேரளாவைச் சேர்ந்த செல்வராஜ் (44) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.