இரணியல்: சேதமடைந்த ஆபத்தான குளக்கரை சாலை சீரமைக்க கோரிக்கை

58பார்த்தது
இரணியல்: சேதமடைந்த ஆபத்தான குளக்கரை சாலை சீரமைக்க கோரிக்கை
இரணியல் இந்து தர்ம பேரவை சார்பாக பேரவை தலைவர் மொட்டவிளை ரவிகுமார் அதிகாரிகளிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: - இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கானான் குளம். இந்த குளத்தின் மூலம் சுற்றுவட்டார மக்கள் தங்களுக்கான நீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். 

இந்த குளத்தின் கரை வழியாக பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் இந்த குளத்தின் கரை வழியாக கடந்து செல்வார்கள். சுமார் இரண்டு ஆண்டுகளாக குளத்தின் கரை இடிந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள் வயது முதிர்ந்த பெரியவர்கள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமமும் அச்சமும் படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கானான் குளத்தின் இடிந்து காணப்படும் பகுதிகளில் கரையை சீரமைத்து பள்ளி மாணவர்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தின் கரையை கட்டி தாங்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி