குளச்சல்: 3 ம் வகுப்பு பள்ளி மாணவி மாயம்

2பார்த்தது
குளச்சல்: 3 ம் வகுப்பு பள்ளி மாணவி மாயம்
குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெனிஷா பாரதி - கனி தம்பதியினரின் மகள் லட்சிதா (8) நேற்று பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாததால் காணாமல் போனார். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி, பெற்றோரின் பிரிவால் பாட்டி ஜெயக்குமாரி வீட்டில் வசித்து வருகிறார். இது குறித்து பாட்டி அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை அடிக்கடி வந்து பார்க்கும் தந்தை கனி கடத்திச் சென்றாரா அல்லது வேறு யாரேனும் கடத்திச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி