குளச்சல்: வேகத்தடையில் விபத்து - விஜய் ரசிகர் சாவு

4பார்த்தது
குளச்சல்: வேகத்தடையில் விபத்து - விஜய் ரசிகர் சாவு
குளச்சல் அருகே வேகத்தடையில் பைக் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த மீனவர் சகாய தினேஷ் (29) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று இரவு மருந்து வாங்கச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகாய தினேஷ், விஜய் ரசிகராகவும், சட்டமன்ற தேர்தலில் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டவராகவும் அறியப்படுகிறார். இவருக்கு மனைவியும், 4 வயது மகளும் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you