குளச்சல் துறைமுக தெரு, பழைய பாலம் பகுதியில் கடற்கரையில் இன்று காலை தண்ணீரில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் குளச்சல் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். வாலிபரின் உடலில் சிறிய காயங்கள் இருந்தன. இறந்தவர் வட மாநிலத்தவர் என தெரியவந்துள்ளது. அவர் எப்படி இங்கு வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.