குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரையில் நேற்று மாலையில் சுமார் 5.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்ட பெண் டால்பின் மீன் இறந்து கரை ஒதுங்கியது. இது குறித்து குளச்சல் மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். குலசேகரம் வன சரக வன பாதுகாவலர் பூவரசன், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் கோடிமுனைக்கு வந்து பிரேத பரிசோதனை செய்து, புதைத்தனர். இது கருப்பு வகையைச் சேர்ந்த டால்பின் என வனத்துறையினர் தெரிவித்தனர்.