குளச்சல்: மீனவர் நல வாரிய தலைவராக ஜோசப் ஸ்டாலின் நியமனம்

1பார்த்தது
குளச்சல்: மீனவர் நல வாரிய தலைவராக ஜோசப் ஸ்டாலின் நியமனம்
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மீனவர் நல வாரியத்திற்கு அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆறு பேர் அலுவல் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை அரசு செயலாளர் சுப்பையன் பிறப்பித்துள்ளார். ஜோசப் ஸ்டாலின் திமுக மாநில மீனவர் அணி செயலாளராகவும் உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி