குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி வருவதால், வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் குளச்சல் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மரைன் போலீசார் கடற்கரை நுழைவு வாயிலில் கயிறு கட்டி, சிவப்பு துணி கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.