கன்னியாகுமரி மாவட்ட சிலம்பாட்டம் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து சரக்கல்விளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சிலம்பம் போட்டியை நடத்தினர். இதில் குமரி மாவட்டத்தில் உள்ள 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் ஒற்றை சிலம்பம், தனி திறன் சிலம்பம், அடிமுறை சிலம்பம் ஆகிய மூன்று பிரிவுகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.