குமரி: எஸ் ஐ ஆர் திட்டம் உரிமைகளை பறிக்கும் -கனிமொழி எம்பி

4பார்த்தது
குமரி கடலோர அமைதி வளர்ச்சி குழு மற்றும் மாவட்ட மீனவர் கூட்டமைப்பு சார்பில் உலக மீனவர் தின மாநாடு நேற்று இரவு குளச்சல் கடற்கரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கனிமொழி எம்பி, எஸ்.ஐ.ஆர் திட்டம் 45 நாட்களில் அதிகாரிகளால் ஓட்டுரிமையை நிர்ணயிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வருங்காலங்களில் ஓட்டுரிமைகள் பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். பொதுமக்களின் ஓட்டுரிமைகளை பறிக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளதாக அவர் பரபரப்பாக கூறினார். இந்த விழாவில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியம், மனோதங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி