திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெலஸ்கின் மகன் அஸ்கர் (23), மதுரையிலிருந்து நேற்று குமரி மாவட்டத்திற்கு ரயிலில் வந்தார். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இறங்க தயாரானபோது, அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி திருடப்பட்டது. இது குறித்து அஸ்கர் நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.