குமரி: கட்டுப்பாட்டை இழந்த டெம்போ ; குதித்த டிரைவர் பலி

0பார்த்தது
குமரி: கட்டுப்பாட்டை இழந்த டெம்போ ; குதித்த டிரைவர் பலி
தக்கலை பகுதியைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநர் செல்வகுமார் (37) நேற்று கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மேடான பகுதியில் சென்றபோது, டெம்போ கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கிச் சென்றது. அச்சமடைந்த செல்வகுமார் டெம்போவில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி