வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஸ்டீபன் (49) நேற்று (23-ம் தேதி) காலை, தனது வீட்டருகே பாத்ரூமுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சத்தமிட்டதும் ஸ்டீபன் தப்பியோடினார். மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.