குமரி: மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

0பார்த்தது
குமரி: மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த அனீஸ் (21) என்பவர், தும்பு ஆலையில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் நண்பரின் பைக்கில் ஹோட்டலுக்குச் சென்றபோது, பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த அனீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :