மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி மகள் இந்துமதி (25). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இந்துமதி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இந்துமதி தூங்குவதற்காக அறைக்குச் சென்றவர் நேற்று அவர் வெளியே வரவில்லை. அறையில் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிப் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உடலைக் கைப்பற்றினர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.