மண்டைக்காடு: பகவதி அம்மன் கோவிலுக்கு சீர் பொருட்கள் பவனி

2பார்த்தது
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோவிலுக்கு சீர் பொருட்கள் பவனி
பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று, முப்பந்தல் ஆலமூடு இசக்கியம்மன் கோவில் பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு சீர்வரிசையும் பூஜை பொருட்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருவார். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தனக் குட ஊர்வலங்களும் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி