மார்த்தாண்டம்: வரதட்சணை கொடுமை; வங்கி மேலாளர் மீது வழக்கு

83பார்த்தது
மார்த்தாண்டம்: வரதட்சணை கொடுமை; வங்கி மேலாளர் மீது வழக்கு
கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷா (24). இவருக்கும் வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லியோன்ஸ் மகன் சிபின் லியோ (32) என்பவருக்கும் கடந்த 8-4-2021 அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. சிபின் லியோ சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின்போது ஆதர்ஷா வீட்டார் வரதட்சணையாக 110 பவுன் நகை, ரூபாய் 10 லட்சம் ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மேலும் கூடுதலாக நிலம் வாங்க ரூபாய் 30 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு ஆதர்ஷாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பணம் தரவில்லை எனில் விவாகரத்து செய்வதெனவும் கொலை செய்து விடுவேன் எனவும் சிபின் லியோ மற்றும் அவரது தந்தை லியோன்ஸ், தாயார் மரியா தெரசா, மகன் ஆசிஸ் ஆகியோர் சேர்ந்து கொடுமை செய்துள்ளனர். மேலும் ஆதர்ஷாவை அவர் தாயார் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்டப் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆதர்ஷா அளித்த புகார் மீது கணவர் உட்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.