நெட்டாங்கோடு: பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

0பார்த்தது
இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு கிருஷ்ணவகை சமுதாய பத்திரகாளி அம்மன் கோயில், 90வது ஆண்டு பொங்கல் வழிபாட்டை இன்று நடத்தியது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், உப்பில்லாத கொழுக்கட்டை செய்து அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். கோயிலின் பொங்கல் விழா மற்றும் அம்மன் திருவீதிவுலா, ஆறாட்டு ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

தொடர்புடைய செய்தி