வெள்ளிச்சந்தை: கடன் தொல்லையால்  விஷம் குடித்து பெண் தற்கொலை

84பார்த்தது
வெள்ளிச்சந்தை: கடன் தொல்லையால்  விஷம் குடித்து பெண் தற்கொலை
வெள்ளிசந்தை அருகே உள்ள சரல் பகுதியை சேர்ந்தவர் மாசானமுத்து மனைவி சசிகலா (49). சசிகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் தொல்லை இருந்தது. நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிகலா விஷம் குடித்துள்ளார். பின்னர் தகவலை மகனுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக மகன் மணிகண்டன் வீட்டுக்கு வந்து தாயாரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நேற்று சசிகலா உயிரிழந்தார். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி