காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்த சுந்தர் (52) என்பவர், தனது உறவினரான வர்கீஸ் என்ற வெடிகுண்டு ஆல்பர்ட் (56) நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக நேற்று அவசர போலீஸ் 100க்கு போன் செய்து புகார் அளித்தார். தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், சுந்தரம் அளித்த தகவல் பொய்யானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சுந்தரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.