திருவட்டார்: அரசு பஸ் டிரைவர் திடீர் மாயம்

63பார்த்தது
திருவட்டார்: அரசு பஸ் டிரைவர் திடீர் மாயம்
திருவட்டார் அடுத்த வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் வினில் (42). அரசு பஸ் டிரைவர். இவர் நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளம் பணிமனையில் பணியாற்றி வந்தார். சம்பவ தினம் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற வினில் பின்னர் வேலைக்கு செல்லவில்லை. வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. 

உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும், நண்பர்களிடம் விசாரித்தும் வினில் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அவரது மனைவி அஜிதா லட்சுமி என்பவர் திருவட்டார் காவல் நிலையத்தில் மாயமான கணவரை கண்டுபிடிக்க புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினில் எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி