திங்கள்நகர், இரணியல், கல்லுக்கூட்டம் பேரூராட்சி மற்றும் ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் நெருக்கடியும் வணிக நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இதனால் சில நேரங்களில் வாகனங்கள் கடும் நெருக்கடிக்குள் சிக்கித் திணறும் சம்பவம் நடந்து வருகிறது. வணிக நிறுவனங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற முடிவு செய்து, 7 நாட்களுக்குள் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திங்கள்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.