தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை கண்டித்து குமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் உட்பட மாவட்டத்தில் 23 இடங்களில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் பங்கேற்ற 144 பெண்கள் உட்பட 1067 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் எம்எல்ஏ எம்ஆர் காந்தி ஆகியோரும் அடங்குவர்.