நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கஞ்சா வைத்திருந்த விஷ்ணு மற்றும் தவசி ஆகியோரை ஆசாரிப்பள்ளம் போலீசார் நேற்று கைது செய்தனர். மருத்துவமனை பின்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.