குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி வந்துள்ளது. இன்று ஆந்திராவில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் வந்தடைந்தது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இந்த அரிசி லாரிகள் மூலம் மத்திய அரசு கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப அவை விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.