ஆந்திராவிலிருந்து சரக்கு ரயில் மூலம் 2,650 டன் ரேஷன் அரிசி நேற்று நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. குமரி மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட இந்த அரிசி மூட்டைகள், லாரிகள் மூலம் பள்ளிவிளையிலுள்ள மத்திய அரசு கிட்டங்கிக்கு மாற்றப்பட்டன. அங்கு பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள இந்த அரிசி, விரைவில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.