குமரி: வீட்டில் இருந்த 35 பவுன் நகை திருட்டு.. போலீஸ் விசாரணை

1535பார்த்தது
குமரி: வீட்டில் இருந்த 35 பவுன் நகை திருட்டு.. போலீஸ் விசாரணை
குமரி மாவட்டம், வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த தனியார் கம்பெனி மேலாளர் மாஹின் அபூபக்கர், வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். திருவனந்தபுரம் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த சுமார் 35 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.