நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை அபேஸ்

55பார்த்தது
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம்  நகை அபேஸ்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்துறை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவருடைய மனைவி சிலுவை மேரி (வயது 72). சம்பவத்தன்று இவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு அண்ணா பஸ்நிலையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். 

அவர் அண்ணா பஸ் நிலையத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகை மாயமாகி இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிலுவை மேரி கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி