மது போதையில் டெம்போ ஓட்டிய டிரைவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்.

1பார்த்தது
மது போதையில் டெம்போ ஓட்டிய டிரைவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்ததையடுத்து, அவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து, டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :