நாகர்கோவிலில் மீன் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

2பார்த்தது
தெள்ளந்தி பகுதியைச் சேர்ந்த அஜின், ராமன்புதூர் மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம், அஜின் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜு, முன்விரோதத்தை மனதில் கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜு அரிவாளால் அஜினை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி