கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தொல்லவிளை பகுதியைச் சேர்ந்த பிரவீன்-பிரதிபா தம்பதியினரின் 10 வயது மகள் பிரமிக்பா, நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர் வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் அவரைத் துரத்தி கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேட்டபோது, நாய் உரிமையாளர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி நாய் கடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.