நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.

1பார்த்தது
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க் கெட்பஸ் நிறுத்தத்தில் நேற்று ஒருவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, தப்பியோட முயன்ற சுயம்புலிங்க அபினேஷ் (20) என்பவரை பிடித்தனர். அவரிடம் 20 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் பேசியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி